தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் தேடி அகழ்வு பணி…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றது

இதன்போது நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொலீசார்,படையினர்,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்,பிரதேச செயலக அதிகாரிகள்,கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் குறித்த காணிப்பகுதியில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...