தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீன-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

10dd7f46ca2f22ce7ce9308c89d2507c_lஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனா –ஸ்ரீலங்காவிற்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 02 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கறுப்புப்பட்டி அணிந்து கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாகவும் வாகனங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றியும் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு விற்பனை செய்ய வேண்டாம் எனவும் தமது தொழிலை நிரந்தரமாக்க வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 07 ஆம் திகதி தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஹம்பாந்தோட்டை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஜப்பான் நாட்டிற்கு சொந்தமான கப்பல் உள்ளிட்ட இரண்டு கப்பல்களை ஊழியர்கள் சிறைபிடித்திருந்த நிலையில், குறித்த கப்பல்களை மீட்பதற்காக சென்ற கடற்படையினருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அத்துடன், இந்த சம்பவங்களை அறிக்கையிட சென்ற ரொஷான் தீலீப் குமார என்ற ஊடகவிலாளர் மீது கடற்படை தளபதி தாக்குதல் நடத்தியிருந்தார்.

துறைமுகத்தில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது ஏனைய ஊடகவியலாளர்களால் ஒளிப்பதிவு செய்த காணொளியில் ரொஷான் தீலீப் குமார நோக்கி வரும் கட்டளைத் தளபதி தீயவார்த்தைகளை பயன்படுத்தி தூற்றியதுடன் அவர் மீது தாக்குதல் நடத்தியமை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...