தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செந்தூரனுக்கு சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்துள்ளார் சிறைத்துறை அதிகாரி இளவரசன்

கொடிய சிறை வாசத்திற்கு பிறகு இப்போது மீண்டும் சிறப்பு முகாம் வந்துள்ளார் செந்தூரன். சிறையில் இருப்பதற்கு பதில் சிறப்பு முகாமில் இருப்பது நல்லது தான் என்றாலும் கியூ பிரிவு காவல்துறை செந்தூரனை சிறப்பு முகாமில் இருந்து இனி விடுதலை செய்யப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.10-senthuran--600

சிறையில் உண்ணா நிலை போராட்டம் செய்த செந்தூரனுக்கு சொல்ல முடியாத துன்பத்தை கொடுத்துள்ளார் சிறைத்துறை அதிகாரி இளவரசன். இருபது காவலர்கள் பிடித்துக் கொள்ள வலுக்கட்டாயமாக செந்தூரன் வாயில் குழாய் சொருகி உணவை செலுத்தியுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். அதன்பின்னர் பல்வேறு மிரட்டல்களுக்கு பிறகு செந்தூரனின் உண்ணா நிலைப் போராட்டத்தை கைவிட வைத்துள்ளனர் காவல்துறை.

செந்தூரனின் அம்மா இலங்கையில் உள்ளார் . அவர் தினம் தினம் செந்தூரனின் விடுதலைக்காக கண்ணீர் விட்டு ஏங்குகிறார் . எப்போது என் மகன் விடுதலை செய்யப்படுவான் என்று அழுது புலம்பிய வண்ணமே உள்ளார். செந்தூரனை இலங்கைக்கு அனுப்பாமல் ஐநாவிடம் ஒப்படைத்தால் அவர்கள் வேறு ஏதாவது நாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் . அதுவும் தமிழக காவல்துறை செய்ய மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு தமிழர் வாழவும் வழியில்லாமல் , சாகவும் வழியில்லாமல் அகதியாக, குற்றவாளியாக வைத்திருப்பது வெட்கக் கேடானது.

தமிழர் நலனுக்காக செயல்படும் தமிழக அரசு ஏன் செந்தூரனின் வாழ்க்கைக்கு வழிகாட்ட மறுக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தமிழக முதல்வர் செந்தூரன் விடயத்தில் கவனம் செலுத்தி அவருக்கு சக மனிதருக்கு உண்டான உரிமைகளை வழங்க முன்வர வேண்டும். ஒன்று அவருக்கு தமிழக குடியுரிமை கொடுத்து இங்கு சுதந்திரமாக வாழவிட வேண்டும் அல்லது ஐ.நா.வில் அவரை ஒப்படைக்க வேண்டும் என்பதே செந்தூரனின் கோரிக்கையாக உள்ளது . தமிழக முதல்வர் இனியாவது செந்தூரன் விடயத்தில் மௌனம் களையவேண்டும் என்பதே தமிழ் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments
Loading...