தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பின்னால் மோடி விமானம்

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பின்னால் சிறிது நேரம் கழித்து அதே வான்வழியில்தான் பிரதமர் நரேந்திர மோடி பயணித்த விமானமும் வந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.மலேசிய எயார்லைனர் MH17 விமானம், உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் நேற்றிரவு இரவு சுட்டுத் வீழ்த்தப்பட்டது.narendra-modi-final

பிரதமர் நரேந்திர மோடி தனது பிறிக்ஸ் கூட்டத்தொடரை முடித்து பிரேசிலில் இருந்து புறப்பட்டு அவ் வழியால் பயணித்துள்ளார். குறித்த மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டிருக்காவிட்டால் சம்பவம் நடந்த பகுதி வழியாகவே பிரதமர் மோடி பயணித்த எயர் இந்தியா – 001 விமானமும் சென்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் டோரெஸ் எனும் இடத்தில் எம்.எச்.17 விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இது பற்றி கருத்து தெரிவித்த விமான அதிகாரி ஒருவர், சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்-17 சென்ற அதே வான்வழியாகவே பிரதமர் மோடியின் விமானமும் சென்றிருக்கும். ஆனால், குறித்த விமான ஓட்டுனர் சாதுரியமாக யோசித்து பயணத்தை மாற்றியிருக்கிறார் என்றார்.

295 பேருடன் சென்ற மலேசிய விமானம் ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டு, அதிலிருந்து 283 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...