Designed by Iniyas LTD
செப் – 10 உலக தற்கொலை தவிர்ப்பு தினம்
உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. “இணையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் பாதுகாப்பு வழங்குங்கள்” என்ற தொனிப்பொருளில் இம்முறை இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வருடாந்தம் சுமார் 3100 பேர் தற்கொலை செய்துகொள்வதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் ஆண்களே அதிகளவில் தற்கொலை செய்துகொள்வது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாவதும் தற்கொலை அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது என சுகாதார தரப்புகள் சுட்டிக்கா்டியுள்ளன.