Designed by Iniyas LTD
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் விபத்து
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5வது பிரிவு கொதிகலனில் இன்று பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் அது திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மற்ற 2 பேர் காயமடைந்துள்ளனர்.