தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சோனியா மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது

சோனியா மற்றும் ராகுல் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது. இது குறித்த குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரங்கள் உள்ளதாக கூறி உள்ள அமலாக்கத்துறை, தனது முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளது.  நேஷனல் ஹெரால்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சோனியா மற்றும் ராகுல் ஆகியோரை பங்குதாரர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த வியாபாரத்தில், சோனியா மற்றும் ராகுலுக்கு பலகோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்றும், அதன் மூலம் வரி ஏய்ப்பு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் பா.ஜ., தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.ssoniya

இந்த மனு மீதான வழக்கின் விசாரணை வரும் 7ம் தேதி நடக்க உள்ளது. அப்போது, யங் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர்களான சோனியா, ராகுல் உள்ளிட்ட நான்கு பேர் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சோனியா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நேஷனல் ஹெரால்டு சொத்துகள் பரிமாற்றத்தில் வரி ஏய்ப்பு மோசடிகள் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என கூறி, அமலாக்கப் பிரிவு முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளது.

சோனியாவிற்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலி்ல், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது, கட்சியின் தலைவியான சோனியாவிற்கு பலத்த அதிர்ச்சியை அளித்தது. மேலும் லோக்சபாவில் எதிர்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் அந்த கட்சி பரிதவித்து வருகிறது. இதற்கிடையில், சோனியாவின் கடந்த கால செயல்பாடுகளை நட்வர்சிங் வௌியிட்டுள்ளது மேலும் நிலைமையை சிக்கலாக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், நேஷனல் ஹெரால்டு விவகாரம் குறித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி, அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கி உள்ளது. முன்னதாக, நேஷனல் ஹெரால்டு விவகாரம் குறித்து வருமானவரித் துறை சோனியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...