தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர் அமெரிக்க குழுவினர்

முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கக் குழு ஒன்று முல்லைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரியவ்ருகின்றது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், முல்லை தீவு  பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

பல முறை  கடல் கொந்தளித்து கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கடல் நிலமை தொடர்பில் அனைவருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

குறித்த விடயம் தொடர்பில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் பிரிவு பிரிவு குழுவினர், மற்றும்  கொழும்பில் உள்ள சில குழுக்களும்  இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டனர். எனினும் அவர்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவின் சுற்றுலா சூழல் மற்றும் புவியியல் மாற்றம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சிலர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அழைப்பிற்கமைய முல்லைத்தீவுக்கு வசென்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Comments
Loading...