தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் சயீத் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

JAYALALITHAA-new-310ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முஃப்தி முகம்மது சயீத் என முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முஃப்தி முகம்மது சயீத் இன்று காலை மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உயர்ந்த தலைவர்களின் ஒருவரான முஃப்தி முகம்மது சயீத், அம்மாநில அரசியலிலும், மத்திய அரசியலிலும் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

அவரது மறைவு நமது நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். சயீத்தை இழந்து வாடும் அவரது மகள் மெகபூபா முஃப்தி சயீத்துக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...