Designed by Iniyas LTD
மட்டு சிறைக்கைதிகளுக்கு கத்தோலிக்க நிறுவனம் உதவி!
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சகல ஆண் பெண் சிறைக்கைதிகளுக்கும் கத்தோலிக்க தொண்டு நிறுவனத்தினால் போர்வைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 சிறைக்கைதிகள் இதனால் நன்மையடைந்துள்ளனர்.
பெத்தல் கிறஸ்தவ இயக்கம் இதனை விநியோகம் செய்துள்ளது. இயக்கத்தின் ஆலோசகர் அருட்தநதை எஸ்.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற போர்வை விநியோக வைபவத்தில் சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர், தொழில் அதிபர் கே.ஜெயராஜ், பிரதம ஜெயிலர் எஸ்.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கைதிகளுக்கான ஆன்மீக சொற்பொழிவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.