Designed by Iniyas LTD
ஜிஎஸ்எல்வி – எஃப்05 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோளை சுமந்துகொண்டு ஜிஎஸ்எல்வி – எஃப்05 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
முன்னதாக இன்று மாலை 4.10 மணிக்கு ஏவப்பட இருந்த இந்த செயற்கைக் கோள் எரிபொருள் நிரப்ப தாமதமானதால் 40 நிமிடங்கள் தாமதமாக அதாவது மாலை 4.50 மணிக்கு ஏவப்பட்டது.
காலநிலையை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்டதாக இன்சாட்-3டிஆர் செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) தயாரித்த இந்தச் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-05 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இது இந்தியாவின் 10-ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.