தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

“டுவிட்டரில்” இணைந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா

Barack-Obama-on-computerஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது “டுவிட்டர்” சமூக வலைத்தளத்தை தொடங்கியுள்ளார். “அமெரிக்காவின் அதிபர்” என்ற வெள்ளை மாளிகையின் அமைப்பு ஓன்று இக்கணக்கை பராமரிக்கவுள்ளது.

“ஹாய் டுவிட்டர் நான் பாரக்! ஆறு வருடங்களுக்கு பின்னர் என்னுடைய முதல் டுவிட்டர் கணக்கு” என தன்னுடைய முதல் பதிவை வெளியிட்டிருந்தார் ஒபாமா.

 அதிபர் ஒபாமாவின் டுவிட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட சில நொடிகளிலேயே 60 மில்லியன் மக்களால் தொடரப்பட்டார்.

ஆயினும் இதுவரை 65 நபர்களை ஒபாமா தொடர்ந்திருப்பதாகவும், ஆனால் இதில் கிளாரி கிளிண்டனையோ அல்லது பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரனையோ அவர் தொடரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

Comments
Loading...