தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ததேகூட்டமைப்பு சுவிஸ்லாந்து தமிழர் தரப்பினரை சந்தித்து பேச்சு

சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோவின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.tna

இந்த கலந்துரையாடலில் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர் தரப்பினரால் சில கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுமாறு கோரப்பட்ட போதிலும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் இணங்கவில்லை என்றும் தெரியவருகிறது.

Comments
Loading...