தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ததேகூ கண்டித்து துண்டுப் பிரசுரம்

யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அச் சுவரொட்டியில் எங்கள் இனத்தை கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரித்த கூட்டமைப்பிற்கு ஓய்வு நிலை படை அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது??

மாகாண சபை அரசே எம்மவர்க்கு நல்லது செய்ய முடியாவிட்டால் மற்றவர்களை குறை காண்பது ஏன்? குறை காண்பதை நிறுத்து. முடியாவிட்டால் இராஜினமா செய்! என்று  அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Copy of notice

Comments
Loading...