Designed by Iniyas LTD
தந்தையின் கொலை தொடர்பில் கோத்தா மீது சந்தேகம்!
தனது தந்தையின் கொலைச் சம்பவம் இடம்பெற்ற பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு அனைத்து பாதுகாப்புகளையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ வழங்கியிருப்பாரோ என தனக்கு சந்தேகமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.ஆதாரம் இல்லாமல் நான் யாரையும் சுட்டிக்காட்டமுடியாது ,எனக்கு சந்தேகமாகத்தான் உள்ளது காரணம் இந்தச் சம்பவம் இடம் பெற்ற பிறகு கொலையாளிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
தனது தந்தையின் ஐந்தாவது வருட நினைவு தின நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளு மன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
மேலும்,தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கிற்கு கோத்தாபய வருகை தரவில்லை, பதிலாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசா லையில் இருந்த துமிந்தவையே சென்று பார்வையிட்டுள்ளார் என ஹிருணிக்கா கூறியுள்ளார்.
அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக துமிந்தவை சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்ப ட்டன என்றும் ஹிருணிக்கா தெரிவித்துள்ளார்.
எல்லா சந்தேகங்களும் தீர வேண்டுமாயின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் புதிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.