தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழரசுக் கட்சியை புனரமைக்க நடவடிக்கை – இரா.சம்பந்தன்

இலங்கை தமிழரசுக் கட்சியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்

சமீபத்ததில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பாக அந்தக்கட்சியினால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கட்சியை புனரமைப்பு செய்வதற்கு இன்று தீர்மானம் ஏடுக்கப்பட்டுள்ளதாதக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றையதினம்  நடைபெற்றுள்ளது

இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிக் கிளைகள் அமைக்கப்பட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை பலப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றிற்கான தீர்வுகள் எடுக்கப்படுவதுடன் அவை நிறைவேற்றுவது தொடர்பில்  ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்   தெரிவித்துள்ளார்.

Comments
Loading...