Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கட்சிகள் ஆக்கபூர்வமான தீர்வுகளை பெற்றுத்தரவில்லை – கேப்பாபிலவு மக்கள் விசனம்..
தமது நிலமீட்பு போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் இதுவரை ஆக்கபூர்வமான தீர்வுகளை பெற்றுத்தரவில்லை என கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
படையினர் வசம் இருக்கும் தமது சொந்த நிலங்களை மீட்டுத்தருமாறுகோரி 539ஆவது நாளாகவும் கேப்பாபுலவு பகுதியில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாம் தமது சொந்த நிலங்களை மீட்டுதருவார்கள் என. தமிழ் அரசியல் கட்சிகளை குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நாங்கள் பெரிதும் நம்பியிருந்தோம் என்றும்,
ஆனால் இதுவரை எமது போராட்டத்திற்கான தீர்வு கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கூறியுள்ளனர்
இவ்வாறான நிலையில் தமது பூர்விக நிலங்களில் இராணுவத்தினர் புதிய கட்டடங்களை நிர்மானித்து இராணுவ முகாமை பலப்படுத்துகின்றதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும் தமது நிலங்களை மீட்கும்வரை போராட்டம் தொடரும் என கேப்பபிலவு மக்கள் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..