Designed by Iniyas LTD
யாழில் இயங்கும் கேக் விற்பனை நிலையம் மூன்றாவது தடவையாக பொலிஸாரால் முற்றுகை..
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் மீண்டும் பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இதன்போது பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளாதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறப்பு பொலிஸ் பிரிவினரால் குறித்த விற்பனைநிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்த நிலையில் விற்பனை நிலையத்திலிருந்த 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, குறித்த விற்பனை நிலையம் இதற்கு முன்னரும் இருதடவைகள் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு பெருமளவு மாவா போதைப்பொருள் கைப்பற்றப்படமை குறிப்பிடத்தக்கது.