தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டமை தொடர்பில் கைதாகவுள்ளார் முன்னாள் கடற்படை தளபதி …

கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நேவி சம்பத்தை    தப்பிக்க உதவிய முன்னாள் கடற்படை தளபதி கைதாகவுள்ளார்.
நேவி சம்பத் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதற்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி, அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக, குற்றப்புலனாய்வு பிரிவு இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிரதமர் ரணிலின் ஆதரவாளரான ரவிந்திர விஜயகுணவர்தன ஓய்வின் பின்னர்  பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அவர்  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...