தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவேண்டுமென கோரிக்கை விடுக்கப்படவுள்ளது

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவேண்டுமென கோரிக்கை விடுக்கபப்டவுள்ளது.

குறித்த கோரிக்கையினை  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோருக்கு  விடுப்பதென நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்களாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் நேற்றைய தினம் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள்    ஆராய்ந்துள்ளனர்.

அடுத்த 15 வருடங்களில் வடமாகாணத்தின் சனத்தொகை இயற்கைக்கு மாறாக சடுதியாக அதிகரிக்கும் எனவும் அந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் அமையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  வடமாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பு பாரிய கேள்விக்குள்ளாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அதோடு வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் சகல திட்டமிட்ட குடியேற்றங்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மகாவலி அதிகாரசபை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதென முடிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீர்மானம் குறித்த கோரிக்கையினை  குறுகிய காலத்திற்குள்  அவர்களிற்கு அனுபுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...