Designed by Iniyas LTD
மத்திய தரைக்கடலில் படகு மூழ்கியதில் 50 பேர் உயிரிழப்பு..
மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்த துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர் உயிரிழதுள்ளதுடன் இதுவரை 68 பேர் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்ட விரோத முறையில் புலம்பெயர்வது வழக்கமாக உள்ளது.
ஆபத்தான மத்திய தரை கடல் பகுதியே அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்ருகின்றனர்.
கடல்வழியாக செல்லும்போது அவர்களின் படகுகள் அடிக்கடி கடலில் மூழ்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 180 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்தபோது படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்ததில் படகு கடலில் மூழ்கியதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
