Designed by Iniyas LTD
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்கள் ஏலம்
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் அதிகாரிகள் அதற்கு பதில் வேறு இடங்களில் மரங்களை நட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 150க்கும் மேற்ப்பட்ட மரங்கள் குறைந்த விலைக்கு அதிகாரிகள் ஏலம் விட்டுள்ளதாக கூறப்படுறகிறது. ஏலம் எடுத்த ஒப்பந்தகாரர்கள் அதனை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். சாலையின் ஓரங்களில் இருந்த அடர்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் பசுமையான கேரள சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருவதால் மரங்கள் வெட்டப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மரங்களை வெட்டும் அதிகாரிகள் கேரளாவைப் போல் ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதில் 5 மரங்களை நட வேண்டும் என்பதை பின் பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.