தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கருணாநிதியைப் போல் ஸ்டாலின் ராஜ தந்திரி அல்ல – வைகோ

திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியை போல் ராஜ தந்திரியல்ல என்றும், அதற்காக அவரை முட்டாள் என்று ஓருபோதும் சொல்ல மாட்டேன் என்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மக்கள் நல கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.vaikko

இதில் முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஒரு சில கட்சிகள் தங்கள் கதவு திறந்து இருக்கிறது என கூறி ஏதோ சந்தையில் காய்கறிகளை விற்பதை போல் அழைத்து கொண்டிருப்பதாக புகார் தெரிவித்தார்.  பின்னர் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தங்கள் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள், கோட்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் தற்போது கொள்கை அடிப்படையில் நான்கு கட்சிகளும் இணைந்திருப்பதாக தெரிவித்தார். ஆனால் மற்ற கட்சிகளுக்கு கொள்கைகள் இருக்கின்றதா? எனவும் அவர் வினா எழுப்பினார்.   பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஊழல் நிறைந்த கட்சிகள் என்றும், இந்த கட்சிகளால் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.  கடைசியாக உரை நிகழ்த்திய மதிமுக பொது செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினுக்கு அவரது தந்தையைப் போல் ராஜதந்திரம் தெரியாது என்றும், அதற்காக அவரை நான் வேறு மாதிரியாக அழைப்பதாக எண்ணிவிட வேண்டாம் என்றும், மு.க.ஸ்டாலினை முட்டாள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

Comments
Loading...