Designed by Iniyas LTD
தொப்பையை கரைக்கும் அன்னாசி…
அன்னாசி பழம் உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதோடு உடலுக்கு பலத்தையும் தருகின்றது.
மேலும் பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி இருக்கிறது.
தேகத்தில் பேதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்காகும்.
அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும் அதோடு பித்தம் சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெருகும்.
இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய குறைந்துவிடும்.

