தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான்காவது ஒருநாள் போட்டி- நியூஸ்லாந்து 279 ஓட்டங்கள் இலக்கு

நியூஸ்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 பரிமாற்ற நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 278 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.துடுப்பாட்டம்

நிதானமாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் டோனி ஆட்டம் இழக்காது 73 பந்துகளில் 79 ஓட்டங்களையும் ஆறாவது விக்கட்டுக்காக களம் இறங்கிய ஜடெஜா அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 54 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் சௌத்தி 2 விக்கட்டுக்களை கைப்பற்றி உள்ளார். 279 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு நியூஸ்லாந்து அணி இன்னும் சிறிது நேரத்தில் துடுப்பெடுத்தாட உள்ளது.

Comments
Loading...