Designed by Iniyas LTD
நாளை ஜப்பான் செல்கிறார் அருண் ஜெட்லி!
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நாளை முதல் 6 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு செல்கிறார் ஜூன் 1-ம் தேதி ஜப்பான் தொழிலதிபர்களுடனான வட்டமேசை மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார் .
அதன்பிறகு, கோப் நகரில் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார். ஜூன் 2-ந்தேதி ஒசாகா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். அன்றே, இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்தும் இந்திய முதலீடு பெருக்க கருத்தரங்கிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.