தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்

நேபாளம், இந்தியா, ஆப்பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.nepal

7.4 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பூமியதிர்ச்சி இன்று நண்பகல் 12.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்த பூமியதிர்ச்சியால் இந்தியாவின் தலைநகர் டெல்லி  உட்பட வடக்கு இந்தியாவின் பல பிரதேசங்களில் உணரப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

டெல்லி புறநகர், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பிஜி தீவு, ஜப்பான், சிலியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேபாளத்தில் நான்காவது தடவையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையரும் கடந்த பூகம்பத்தோடு நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மீதமுள்ள இலங்கையரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இன்று ஏற்பட்ட பூகம்பத்தினால் இலங்கை தூதரக கட்டிடம் சிறிய தேசமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments
Loading...