தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்

pachamuthuபச்சமுத்துவின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக, 112 பேரிடம் ரூ.75 கோடி வரை மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன், பல்கலை. வேந்தர் பச்சமுத்து ஆகியோர் மீது  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

 இதில், ஆகஸ்ட் 26-இல் கைது செய்யப்பட்ட பச்சமுத்து, சைதாப்பேட்டை குற்றவியல் நீநீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது உடல்நிலையை சுட்டிக் காட்டி கோரிய ஜாமீன் மனுவை நிராகரித்து, செப்டம்பர் 9 வரை சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் பிரகாஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மீண்டும் கோரப்பட்ட ஜாமீன் மனுவையும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 இதையடுத்து, ஜாமீன் கேட்டு பச்சமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, பதில் அளிக்க கால அவகாசம் வழங்குமாறு காவல் துறை வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளி வைத்து  நீதிபதி உத்தரவிட்டார்.

Comments
Loading...