Designed by Iniyas LTD
பாதை மற்றும் பாலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு புதிய தொ.பே இலக்கம்
அபிவிருத்தி செய்யப்படும் பாதை மற்றும் பாலம் தொடர்பாக பாதைகளில் ஏற்படும் பிரச்சினைகளை அறிவிப்பதற்காக விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணங்கங்கள் தொடர்பாக சரியான தகவல் மற்றும் இதற்காக செலவழியும் நேரம் தொடர்பாகவும் தகவல்களை இந்த சேவை ஊடாக பெற்று கொள்ள முடியும் என அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
1968 என்ற விஷேட தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த சேவையை பெறமுடியும் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணங்களில் ஏற்படும் பிரச்சினைகளை இலகவாக தீர்த்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.