Designed by Iniyas LTD
பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று இணைத்துக்கொள்ளபட உள்ளது.
இன்றைய தினம் ஒழுங்கு பத்திரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இணைத்துக்கொள்ளப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 55 பேர் கையொப்பமிட்டிருத்தனர்.
குறித்த பிரேரணை சபாநாயகரிடம் கடந்த 21 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் ஒழுங்குபத்திரத்தில் குறித்த இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும், நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள 113 உறுப்பினர்களின் ஆதரவு அத்தியாவசியமானது எனவும் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.