Designed by Iniyas LTD
பிரபாகரன் சிலையை அகற்றியதை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் : மதிமுகவினர் கைது
நாகப்பட்டினத்தில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் மோகன் முன்னிலையில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதி தெற்கு பொய்கை நல்லூரில் சிலை வைத்துள்ளனர். தெற்கு பொய்கை நல்லூரில், ஐயனார் கோவில் வளாகத்தில் கிராமத்து மக்கள் எழுப்பிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் சிலையை உடைத்து நொறுக்கிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, நேற்று காலை நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுமலர்ச்சி தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் மோகன் முன்னிலையில் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் பிரபாகரன் சிலை அகற்றத்தைக் கண்டித்து கருப்புக்கொடியேந்தி முழக்கங்கள் எழுப்பி ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

