Designed by Iniyas LTD
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெண் வாக்காளர்களே அதிகம்
புதுச்சேரி மாநிலத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், ஆண்களைவிட, பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுந்தரவேலு அந்த பட்டியலை வெளியிட்டார். அதில், மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து 27 ஆயிரத்து 128 பேர் உள்ளனர். 4 லட்சத்து 41 ஆயிரத்து 168 ஆண் வாக்காளர்களும்,4 லட்சத்து 85 ஆயிரத்து 886 பெண் வாக்காளர்களும்,மூன்றாம் பாலின வாக்காளர்கள் 74 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 433 பேர் உள்ளதாகவும், இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் சுந்தரவேலு தெரிவித்தார்.