தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

29 நாகை மீனவர்கள் காவல் ஜனவரி 25 வரை நீட்டிப்பு

fishஇலங்கை சிறையிலிருக்கும், நாகை மீனவர்கள் 29 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. திரிகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட 29 மீனவர்களின் காவலை, வரும் ஜனவரி 25-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சரபணராஜா உத்தரவிட்டார்.

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 29 பேரை கடந்த மாதம் 31-ந் தேதி இலங்கைக் கடற்படை சிறைபிடித்தது.

 பொங்கல் திருநாளுக்கு முன்னதாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள், இந்த தீர்ப்பால் கவலையடைந்துள்ளனர்.

Comments
Loading...