Designed by Iniyas LTD
புத்துயிர் பெறும் கிழக்கு மாவீரர் துயிலுமில்லங்கள்…
வட கிழக்கு பகுதிகளில் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஏற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களாக மட்டக்களப்பு தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும்,
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம் திருமலை ஆலங்குளம், செம்பிமலை மாவீரர் துயலுமில்லங்களில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் வாகரை பிரதேச பொறுப்பாளர் மேனிகன் தெரிவிக்கையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணியும் இதர வேலைகளும் அப்பிரதேசத்திற்கு என உருவாக்கப்பட்டிருக்கும் மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவினரினால் நடைபெற்றன என்றும்.
அதனடிப்படையில் இன்று வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லத்திற்கான சிரமதானப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி எமது தேசத்திற்காக உயிர்நீர்த்த மாவீரர் செல்வங்களுக்கான அஞ்சலியினை மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதற்கு எமது குழு மற்றும் தேசத்தின் வேர்கள் அமைப்பு முன்னால் போராளிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் என பலரும் எமக்கு உறுதுணையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் .
இதன் காரணமாக இம்முறை மிக எழுர்ச்சியாக மாவீரர் நாளா நடாத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் நம்பிகை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
