Designed by Iniyas LTD
பேஸ்புக்கிற்கு 5 லட்சம் பௌண்டுகள் அபராதம் விதித்த பிரிட்டன் ….
சமூக வலைத்தளங்களில் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நிறுவனம் பேஸ்புக்.
பல்வேறு நாடுகளிலிருந்து பல கோடி பேர் இதனை உபயோகப்படுத்துகின்ற நிலையில் அவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக ஏற்கனவே பல நாடுகள் இதன் மீது குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் போடப்பட்ட வழக்கின் படி, 2007 முதல் 2014 ஆண்டு வரை சுமார் 10 லட்சம் வாடிக்கையாளர்களின் பர்சனல் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில்புகார் தெரிவித்தும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பிரிட்டன் அரசு பேஸ்புக் மீது 5 லட்சம் பௌண்டுகள் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.