தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணித்த மக்கள்..

வடக்கு கிழக்கு மகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில்இன்று (19)  காலை  மட்டக்களப்பில் பாரிய  மக்கள் எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

இதன்போது   பேரணியில்  கலந்துகொண்ட  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் உள்ளிட்டோரை  விலகிச் செல்லுமாறு  மக்கள் கோசங்கள் எழுப்பியுள்ளனர்.

மேலும்   ஊடகவியலாளர்களிடம் குறித்த நபர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல என்றும், அவர்களை போராட்ட இடத்தில் வைத்து நேர்காணல் செய்ய வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரியுள்ளனர்.

இதனையடுத்து  குறித்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...