Designed by Iniyas LTD
பௌத்த மதத்துக்கும் சிங்கள மாணவர்களின் பல்கலைக் கழக கல்விக்கும் வடக்கில் எந்த விதமான சுதந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதத்துக்கும் சிங்கள மாணவர்களின் பல்கலைக் கழக கல்விக்கும் வடக்கில் எந்த விதமான சுதந்திரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மல்வத்து பீடத்தின் அநுநாயக்க திவன்கும்புரே ஸ்ரீ விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டிக்குச் சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு சென்று விகாரை அமைக்க முடியவில்லை என்றும், அங்கு புத்தர் சிலை வைக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் . சிங்கள மாணவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கல்வி கற்க முடியாதளவுக்கு அங்குள்ளவர்கள் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் கொடுக்கின்றதாகவும், இவை குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனத்திற் கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
