தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்தவின் ஊழல் மோசடி அறிக்கை விரைவில் மைதிரியிடன் ஒப்படைப்பு!

maithiri-and-rajapaksaமுன்­னைய ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யில் நடை­பெற்ற மிகப் பெரிய ஊழல் மோசடி­ கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­யின் இறுதி அறிக்­கை­கள் சில, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசே­ ன­ விடம் கைய ளிக் கப்­பட வுள்­ள­தா­கத் தெரிய வரு­கின்­றது.
மகிந்த ராஜ­பக்­ச­வு­ட­னும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ரு­ ட­னும் நேர­டி­யா­கத் தொடர்­பு­டை­ய­தா­கத் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள மோச­டி­கள் தொடர்­பி­லான அறிக்­கையே ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது.
மகிந்த ஆட்­சி­யில் நடை­பெற்ற மிகப் பெரிய ஊழல் மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்கு, அரச தலை­வர் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­குழு பல்­வேறு மோச­டி­கள் தொடர்­பில் விசா­ர­ணை­களை நடத்­தி­யது.
முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அரச தொலைக்­காட்­சி­யில் தேர்­தல் விளம்­ப­ரங்­கள் ஒளி­ப­ரப்­பி­ய­மைக்­கான பணத்தை மீளச் செலுத்­தாமை மற்­றும் பசில் ராஜ­பக்ச தொடர்­பி­லான ஊழல் அறிக்­கை­கள் என்­பன அரச தலை­வ­ரி­டம் ஏற்­க­னவே கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.
அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கத் திறப்பு விழா­வுக்­கா­கச் செல­வி­டப்­பட்ட பணத்­தில் இடம்­பெற்ற மோசடி தொடர்­பி­லான அறிக்கை, இலங்­கைப் போக்­கு­வ­ரத்­துச் சபைக்­குச் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் நிய­மங்­கள் வழங்­கிச் சம்­ப­ளம் வழங்­கி­யமை மற்­றும் சிறப்­பு­ரி­மை­கள் வழங்­கி­யமை தொடர்­பி­லான அறிக்கை, வீதி வலை­ய­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்­தும் கருத்­திட்­டத்­திற்­க­மைய சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் லான்ட் குரூ­சர் வண்­டி­யொன்று பயன்­ப­டுத்­தப்­பட்­ட­மைமை உள்­ளிட்ட ஊழல் மோச­டி­கள் தொடர்­பில் விசா­ரணை செய்­யப்­பட்ட மூன்று அறிக்­கை­களே இந்த வாரம் அரச தலை­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளன.
Comments
Loading...