தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமெனில் யாழ் கோட்டை வேண்டும் – இராணுவ தளபதி..

மக்களில் காணிகளை மக்களிடம் திருப்பிச் செலுத்த வேண்டுமெனில் யாழ் கோட்டையை தமக்கு தரவேண்டுமென  இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தில்  நேற்றைய தினம்  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வெளிப்ப்டுத்தியுள்ளார்.

யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருவதாகவும், . இன்னமும் மக்களின் காணிகள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  யாழில்  இராணுவத்தினர்  நிலை கொண்டுள்ள  ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கொடுக்க வேண்டுமெனில் தமக்கு யாழ் கோட்டையினை கையளிக்க வேண்டுமெனவும் இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...