தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்கள் நல கூட்டியக்கத்தை கூட்டணியாக நாளை மறுநாள் அறிவிப்போம்: வைகோ

vaiko imgfமக்கள் நல கூட்டியக்கத்தை கூட்டணியாக நாளை மறுநாள் அறிவிக்கப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

 மேலும் அண்ணாவின் கொள்கைளை அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பின்பற்றுவதில்லை என குற்றஞ்சாட்டிய வைகோ, மக்களை சந்தித்து மதுவுக்கு எதிரான பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 மேலும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...