தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் 17 வயது சிறுவன் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் தந்தை காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா ஜும் ஆ பள்ளிவாசல் வீதியில் வசித்துவந்த றவூப் முகம்மட் சியாம் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.missed

பிரத்தியேக வகுப்பொன்றிற்குச் செல்வதாக கூறி, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு வீட்டை விட்டுச் சென்ற குறித்த மாணவன், நேற்றுவரை வீடு திரும்பாத நிலையில், மாணவனின் தந்தை நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் வீட்டை விட்டு போகும்போது கபில நிற ஆடை அணிந்திருந்ததாக குறிப்பிட்ட அவரது தந்தை, குறித்த மாணவன் தொடர்பில் தகவல் அறிந்தால் 0779344130 என்ற கைத்தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரியுள்ளார். இம் மாணவனை தேடும் முயற்சியை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காணாமல் போன மாணவன், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் க.பொ.த.உயர் தர தகவல் தொழிநுட்ப பாடநெறியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...