Designed by Iniyas LTD
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவ நினைவேந்தல் அனுஸ்டிப்பு…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் 32வது நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை ,மகிழடித்தீவு சந்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளர் ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.
இப்படுகொலைச்சம்பவத்தில் நான்கு உறவுகளை இழந்த தாயார் ஒருவரான அமரசிங்கம் சீதேவிீப்பிள்ளை அம்மாவின் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்மாகியது.
அதனைத்தொடர்ந்து கட்சியின் மட்டு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் செயலாளர் குழந்தைவேல் ஜெகநீதன் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளரான சிவகுமார் (மோகன்) ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
மேலும் தலைமயுரையினை ரகுநாத் அவர்களும் நன்றியுரையினை பட்டிப்பளை பிரதேச செயற்பாட்டாளரான பாக்கியராசா ஆகியோரும் ஆற்றியிருந்தனர் .
கடந்த 1987ம் ஆண்டு ஜனவரி 27, 28 ஆம் தேதிகளில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இறால் பண்ணையொன்றில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 87 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




