தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மண்ணை மலடாக்கும் மான்சான்டோவுக்கு உலகெங்கும் எதிர்ப்பு : புதுச்சேரியிலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

monsantoமான்சான்டோ எனும் பன்னாட்டு விதை விற்பனை நிறுவனம் மரபணு மாற்ற விதைகள் உள்ளிட்ட நவீன விவசாய தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணை மலடாக்குவதாக கூறி உலகெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருக்கின்றன.

மான்சான்டோ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்கா, பிரான்ஸ், மெக்சிகோ, சிலி என 40 நாடுகளில் கண்டன போராட்டங்கள் நடைப்பெற்றன. மேலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் மான்சான்டோவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. மான்சான்டோ நிறுவனம் உலகெங்கும் உயிரி தீவிவாதத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. புதுச்சேரியில் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கள ஆய்வு என்ற பெயரில், மாற்ற மரபணு ஆய்வினையும் செய்ய வேண்டாம் என்றும் வேளாண் அறிவியலாளர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் அரசியல்வாதிகளை அடிமையாக்குவதை கைவிட வேண்டும் என்பது போன்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Comments
Loading...