Designed by Iniyas LTD
பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது!
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
114-ஆவது ஆண்டாக நடைபெறும் பிரஞ்ச் ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோக்கோவிச், ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
பிரஞ்ச் ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரபேல் நடால் ஆறாம் நிலை வீரராக களமிறங்குகிறார். முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் குவின்டின் ஹாலியை அவர் எதிர்கொள்கிறார். மகளிர் பிரிவில் செரினா வில்லியம்ஸ்,மரியா ஷரபோவா, சிமோனா ஹாலேப் , பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.