தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் புதைகுழியை நேரில் சென்று ஆராய்ந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி…

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,  சட்டத்தரணி வருன திசேரம் ஆகியோர்   நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை  காலை 7.15 மணியளவில் 6 ஆவது நாளாக குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரணித்தா ஞானராஜ், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி  மற்றும்,  சட்டத்தரணி வருன திசேரம் ஆகியோர்  ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடு அகழ்வுகளை நேரடியாக சென்று அவதானித்ததுள்ளனர்.

அஅர்களுடன்  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளாரும்  சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்ந்து அவர்கள்  மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வரும் மண் குவியல்களையும், அங்கு இடம் பெற்று வருகின்ற அகழ்வுகளையும் நேரடியாக பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

இதேவேளை மன்னார் நீதவான்  முன்னிலையில் குறித்த இரு இடங்களிலும் 6 ஆவது தடவையாக இன்று  அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...