தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் அதி சக்திவாய்ந்த வெடிபொருள் மீட்பு!

microsThumb.phpமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) சக்திவாய்ந்த வெடிபொருள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது சுமார் பத்து கிலோகிராம் எடைக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த வெடிப்பொருளை உரிய அனுமதியுடன் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் மேற்படி பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த காணியின் உரிமையாளர் தோட்டச் செய்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த சக்திவாய்ந்த வெடிப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் வெடிப்பொருளை மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...