Designed by Iniyas LTD
மன்னாரில் கூலர் வாகனம் விபத்து! இருவர் படுகாயம்
மட்டக்களப்பில் இருந்து மன்னாருக்கு சென்ற சிறிய ரக கூலர் வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பில் இருந்து மன்னாருக்கு கூலர் ரக வாகனத்தில் மீன் கொள்வனவு செய்வதற்காக நேற்று சென்று கொண்டிருந்த போது காலை 7 மணியளவில் பன்ன வெட்டுவான் பகுதியில் வைத்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரையின் காரணமாக, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதிக்கு அருகில் உள்ள குளக்கட்டுடன் மோதியுள்ளது.
தொடர்புடைய பதிவு
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் காயங்களுக்கு உள்ளான நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.