தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு..

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில்  சந்திப்பொன்று  இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் தெரிவித்ததாகவும், அதற்கு  பதிலளித்த சம்பந்தன்,

கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன்  எழுத்துமூலம் உறுதிமொழி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரிசீலித்து முடிவு எசெய்யமுடியும் என கூறியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் கலந்துகொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று  நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...