தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மின்சாரத்தை சிக்கனமாக பாவிப்பவர்களுக்கு பரிசு!

Tamil_News_large_62606520130114062247மின்­சா­ரத்தை சிக்­க­ன­மாக பாவிக்கும் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு மின்­சார அதிர்ஷ்­டத்தை வழங்கும் திட்­டத்தை ஸ்ரீ மின்­வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி அமைச்சு அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­க­மைய நூற்­றுக்கு 20 மற்றும் 10 வீதம் மின்­சா­ரத்தை சிக்­க­னப்­ப­டுத்­து­ப­வர்­க­ளுக்கு அதிர்ஷ்ட சீட்­டி­ழுப்பின் மூலம் சலு­கைகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக கொழும்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றுகையிலேயே மின்­சார அதிர்ஷ்ட திட்டம் தொடர்பில் மின்­வலு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி பிர­தி­ய­மைச்சர் அஜித் பி.பெரேர அறி­வித்தார்.

பிர­தி­ய­மைச்சர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் நாட்டின் இன்­றைய மின்­சார நெருக்­க­டியின் மத்­தியில் மின்­சாரப் பாவ­னை­யா­ளர்கள் மின்­சா­ரத்தை சிக்­க­னப்­ப­டுத்­து­வதன் மூலம் நாட்­டுக்கு தமது பங்­க­ளிப்பை வழங்க முடியும்.

மின்­சார அதிர்ஷ்ட திட்­டத்தின் பாவ­னை­யா­ளர்கள் தம்மை இணைத்துக் கொள்­வ­தற்­காக L- – கணக்கிலக்கம் – என பதிவு செய்து 1984 என்ற இலக்கத்துக்கு குறுஞ்­செய்­தியை அனுப்­பு­வதன் மூலம் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.

நூற்­றுக்கு 20 வீதம் மின்­சா­ரத்தை சிக்­க­னப்­ப­டுத்­துவோர் அதிர்ஷ்ட சீட்­டி­ழுப்பு மூலம் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். இவ்­வாறு 1000 பேர் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள்.

இவ்­வாறு தெரி­வா­வோ­ருக்கு மின்­சா­ரத்தை சிக்­க­னப்­ப­டுத்­து­வதில் மாதத்தின் முதல் மாதத்­திற்­கான மின்­சார கட்­டணப் பட்­டியல் தொகை செலுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அதற்கு முழு­மை­யான விலக்­க­ளிக்­கப்­படும்.

அதே­போன்று மின்­சா­ரத்தை 10வீதம் சேமிப்போர் 5000 பேர் தெரிவு செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கும் இதே­போன்று முதல் மாத மின்­சார கட்­ட­ணப்­பட்­டியல் கொடுப்­ப­ன­வுகள் தொகை­யி­லி­ருந்து 50 வீதம் கழிவு வழங்­கப்­படும்.

இவ்­வாறு மின்­சா­ரத்தை சிக்­க­னப்­ப­டுத்­து­வது தொடர்பில் பாவ­னை­யா­ளர்கள் மத்­தியில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எதிர்காலத்தில் இது போன்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். உலகின் பல்வேறு நாடுகளில் இது போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றார்.

Comments
Loading...