தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவில் சமாதான குலைவு நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் பௌத்த துறவி விசாரணைக்கு அழைப்பு….

கடந்த 14.01.18 அன்று முல்லைத்தீவு நாயாற்றுபகுதியில் உள்ள நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில்  செம்மலை கிராம மக்கள் வழிபாடு பூசைகள் நடத்தசென்ற வேளை அங்கு  விகாரை அமைத்து குடியிருக்கும் பௌத்த துறவியும் தெற்கில் இருந்து வந்த பௌத்த துறவிகள் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்கள் அங்கு சென்று பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீசார் சம்பவ நிகழ்வு அனைத்தினையும் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன் முறுகல் நிலைமேலும் வலுப்பபெறாத சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து அன்று தமிழ் மக்கள் நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்னிலையில் முல்லைத்தீவில் சமாதானத்திற்கு குலைவு ஏற்படுத்தியமை தொடர்பில் நாயாறு குருகந்த  விகாரையில் பௌத்த இந்து வழிபாட்டில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பில் 81 ஆம் பிரிவின் கீழ் முல்லைத்தீவு பொலீஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியினால் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழங்கு தொடர்பில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரரணக்கு வருமாறு முதலாம் தரப்பு நபராக பௌத்த துறவியினையும் இரண்டாம் தரப்புநபராக தமிழர் மரபுரிமை இணைத்தலைவர்களின் ஒருவரான வி.நவநீதன்,ஆலய நிர்வாகிகளான க.பாஸ்கரன்,மு.குகதாஸ் ஆகியவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த வழங்கினை இரண்டாம் தரப்பு வாதிகளால் அவசர தன்மை கருதி முன்னகர்த்தல் பத்திரம் ஊடாக 22.01.19 அன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக குறித்த வழக்கு விசாரணை 22.01.19 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  முதன்னிலை சட்டத்தரணியான அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் இரண்டாம் தரப்பிற்கு ஆதரவாக மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது ஏற்கனவே புராதனமாக இருந்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பெயரினை அங்கு இருக்கும் பௌத்த துறவி கணதேவி தேவாலய என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பொலீசார் சரியாக உரியமுறையில் விசாரணை செய்யப்படவில்லை  இதன் பின்னர் மீண்டும் வழிபாட்டுக்காக அங்கு சென்ற மக்களுடன் பௌத்த பிக்கு முரண்பட்டதன் அடிப்படையில் சாமாதான குலைவு ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸ் நிலைய தலைமை அதிகாரியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி பிள்ளையார் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்ற மக்களுக்கு பௌத்த பிக்குவால் ஏற்படுத்தப்பட்ட இடையூறு தொடர்பிலான புகைப்படங்களுடன் மற்றும் குறித்த பௌத்த விகாரை சட்டவிரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது
என்பதற்கான தகவல் அறியும் சட்டமூலம் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட விபரங்கள் என்பனவும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வழக்கினை விரைவு படுத்தி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் குறித்த வழங்கு விசாரணை 24.01.19 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளதுடன் அன்றைய தினம் முதலாம் தரப்பான பௌத்த பிக்குவினையும் மன்றில் முன்னிலையாகுமாறு பொலீசாருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது தாமாக முன்வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் உண்மைத்தன்மை நிலமை தொடர்பில் நீதிமன்றுக்கு தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் அனைவருக்கும் நீரவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்
Comments
Loading...